நாளை முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு... பயணிகள் வரவேற்பு!
நாளை நவம்பர் 1ம் தேதி முதல் செங்கோட்டை – தாம்பரம் இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 20681/20682) பயணிகளின் அதிகப்படியான தேவை காரணமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலிலும், நவம்பர் 2ம் தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயிலிலும் புதிய பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன. இதில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, இரண்டு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு பொது பெட்டி சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடு வருகிற 2026 ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், நெல்லை வழியாக இயங்கும் தாம்பரம் – நாகர்கோவில் ரெயிலிலும் (வண்டி எண் 22657/22658) இதே போன்று ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, இரண்டு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு பொது பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது நவம்பர் 2ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயிலிலும், நவம்பர் 3ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலிலும் அமலுக்கு வரும். இந்த தகவலை தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!