சர்ச்சை வீடியோ!! திருப்பதியில் கதாநாயகியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆதிபுருஷ் டைரக்டர்!!
பாகுபலி படத்தின் மூலம் ”பான் இந்தியா” நடிகராக தம்மை உயர்த்தி கொண்டவர் நடிகர் பிரபாஸ். இவருடைய பாகுபலி படத்துக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அதிலும் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ராதே ஷியாம்” ரூ.100 கோடிக்கு மேல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இந்நிலையில், அவர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் ராமராக நடித்துள்ளார் நடிகர் பிரபாஸ்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றிபெற அவர்கள் பிரார்த்தனை செய்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்து இருவரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப டைரக்டர் ஓம் ராவத்தை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடித்தார். பதிலுக்கு நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் ராவத் சட்டென முத்தம் கொடுத்துவிட்டார். அவரின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத கீர்த்தி சற்று அதிர்ச்சியுடன் காரில் ஏறி கிளம்பி சென்றார். ஆதிபுருஷ் டைரக்டரின் இந்த செயல் சமூகவலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!