ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

 
பணம்

இந்தியாவில் காப்பீட்டைப்பொறுத்தவரை, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சந்தையில் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த நம்பிக்கை. எல்ஐசியில் பெரும்பாலும் கிராமங்களில் கூட அனைவருக்கும் ஒரு பாலிசி உள்ளது. ஓய்வூதியம் அல்லது வழக்கமான வருமானத்திற்கு திட்டமிடுபவர்கள் எல்ஐசியின் ஜீவன் சாரல் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இது காப்பீட்டுத் தொகையையும், ஆண்டு வருமானத்தையும் வழங்குகிறது. இருப்பினும், எல்.ஐ.சி ஜீவன் சாரலை அனைவரும் பெற முடியாது. நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எல்.ஐ.சி ஜீவன் சாரல் பாலிசியின் முக்கிய விவரங்கள் உங்களுக்காக....

எல்.ஐ.சி.

இத்திட்டத்தின் பாலிசி உங்களுக்கு நிலையான வருமானத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் நீங்கள் ஆண்டு, அரையாண்டு மற்றும் காலாண்டு ஓய்வூதியத்தை உங்கள் விருப்பம் போல பெறலாம். 40 முதல் 80 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த முடிவு  ஐ.ஆர்.டி.ஏவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை  LICIndia.in இணையதளத்தின் மூலமாகவும் வாங்கலாம். இவ்வசதி இல்லாதோர் இதை ஆஃப்லைன் முறையிலும் வாங்கலாம். ஓய்வூதியத்தை மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.

எல்.ஐ.சி

இதில் பிரீமியத்தை மொத்தமாக செலுத்த வேண்டும். ஒருவர் ரூபாய் 10 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 52,000 ஓய்வூதியம் கிடைக்கும். இந்த பாலிசியைப் பெற எல்.ஐ,சி உங்களை மருத்துவப் பரிசோதனை செய்யச் சொல்லலாம். பாலிசியை உங்களுக்கு வழங்குவதற்கு முன் சரிபார்க்கப்படும் ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும். இது போன்று பாலிசி எடுக்கும் போது, மறக்காமல் உங்களுக்கு நாமினியாகவும் ஒருவரை சேர்த்துக் கொள்ளுங்க.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web