மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!

 
உஷார்!! மார்கழி மாசத்துல செய்யவே கூடாத 4 தவறுகள் இது தான்!!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா என்று ஆச்சர்யபடுவீர்கள். சுத்தமான ஓசோன் காற்றில் துவங்கி நம் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சுத்தப்படுத்துகிற அத்தனை ஆற்றல் மார்கழி மாதத்துக்கு உண்டு. அதனால் தான் தை, சித்திரை மாதங்களை எல்லாம் விட்டு விட்டு, மாதங்களில் அவள் மார்கழி என்று கவியரசர் பாடினாரோ? தமிழ் மாதங்களில் 9 வது மாதமாக வரும் மார்கழி பீடு உடைய அதாவது பெருமை உடைய மாதம்.மார்கழி என்றால் மழை முடிந்து  பனி தொடரும்  அழகிய மாதம் இம்மாதம் தனுர் மாதம். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் கோலமிட்டு இறைவழிபாடு செய்து  வருவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான ரீதியாகவும் மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் காற்றில் கிடைக்கும் ஓசோன் அந்த வருடம் முழுவதும் ஆரோக்கியமாக உடலை பேண அச்சாரமாக திகழ்கிறது. ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு மேற்கொண்டு கடவுளையே மணாளனாக கொண்டாள்.

மார்கழி

அத்தனை சிறப்பு மிக்க மாதம் இது. இம்மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் மனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகவே சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்கிறது நமது புராணங்கள் இந்த மாதத்தில் தான் மரணத்தை வென்ற மார்க்கண்டேயர் பிறந்தார்.  மார்கழி பௌர்ணமியில் வரும் திருவாதிரையில் ஆருத்ரா தரிசனமும் , வைகுண்ட ஏகாதசியில் விஷ்ணு ஆலயங்களில் சொர்க்க வாசல் திறப்பும் கோலாகலமாக நடத்தப்படும். மேலும் மார்கழியில் தான் அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம் போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சிவ ஆலயங்களில் திருவாதிரைக் களியும், ஏழுகறிக்கூட்டும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. 'திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்பது பழமொழியாகும்.

உஷார்!! மார்கழி மாசத்துல செய்யவே கூடாத 4 தவறுகள் இது தான்!!

விஷ்ணு ஆலயங்களில் பகல் பத்து, ராப்பத்து என ஏகாதசி உற்சவம் பிரசித்தி பெற்றது.  கிருஷ்ணரே கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்கிறார். அதிலிருந்து இந்த மாதத்தின் சிறப்பை உணரலாம். அதிகாலையில் தியானம், யோகா போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு இது சரியான மாதம். இந்த மாதத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி அதில் நேர்மறை எண்ணங்களை வசப்படுத்த அருமையான மாதம் இது. கோகுலத்து மக்களை வெள்ளத்தில் இருந்து காக்க ஸ்ரீகிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தாங்கி பிடித்த மாதம் இது. மகாபாரதப்போர் நடந்து கீதையை நமக்கு அருளிய மாதம் இது. இந்த மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்பிருந்து வழிபட கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பான் என்பது ஐதீகம். திருமணமான பெண்கள் இந்த நோன்பை ஏற்க தீர்க்க சுமங்கலில் யோகம் கிட்டும். இத்தனை சிறப்பு உடைய மார்கழியில் மனமுருகி பிரார்த்தனை செய்வோம். பெருமைகளை அடைவோம்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web