பள்ளிகளில் ஆதித்யா எல்1 ஏவப்படும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு?!

 

 
 

இஸ்ரோ சார்பில், சந்திராயன்3 வெற்றிகரமாக நிலவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய, செப்டம்பர் 2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை, 11:50 மணிக்கு  ஆதித்யா- எல்1 விண்கலம் ஏவப்படுகிறது.


 இதுகுறித்து பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் , இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், விண்வெளி அறிவியல் மீதான நாட்டத்தை அதிகரிக்கவும், செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்நிகழ்வை, காலை, 11:50 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா- எல்1 விண்கலம் ஏவப்படும் நிகழ்வை, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆய்வக உதவியாளர் சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை