கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், கரூரைத் தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நெரிசிலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைபோல தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உட்பட தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது நாமக்கல் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து இடையூறு, அனுமதி இல்லாத இடத்தில் பேனர் வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் சதீஷ் உள்பட பலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!