அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் !
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை இராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (நவம்பர் 5, 2025) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டங்களில் பூத் கிளைக் கழக நிர்வாகிகளை ஆன்லைனில் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமானவை என அவர் வலியுறுத்தினார்.
அவர், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைச் சரிசெய்து, துல்லியமான பட்டியல் உருவாக்க உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டார். அதோடு, வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சிப் பணிகள் மற்றும் அமைப்புச் சீரமைப்புகள் குறித்து விரிவான ஆலோசனையும் வழங்கினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!