பகீர் வீடியோ... காரில் யானையை துரத்திய அதிமுக பிரமுகர்... ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
கோவை அருகே வனப்பகுதியில் அதிமுக பிரமுகர், யானையை காரில் சென்றபடியே துரத்தி செல்லும் வீடியோ வைரலானதையடுத்து, அதிமுக பிரமுகருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை பகுதியில் வனவிலங்குகள் நடமாடிவருவதால், அவற்றின் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகளை மீறியும் நள்ளிரவில் சிலர் வனப்பகுதிக்குள் வாகனத்தில் செல்கின்றனர்.
இது தொடர்பான விசாரணையில், புலிகள் காப்பக பகுதியான நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அதிமுக பிரமுகர் மிதுன் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!