அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரை, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கரூர் தொகுதியிலிருந்து அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் நாடாளுமன்றக் குழு தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!