undefined

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜை மற்றும் புதிய மேல்சாந்திகள் தேர்வு!

 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை மாதாந்திர பூஜை ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடைபெறும் வழக்கப்படி, ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை கோவில் திறக்கப்பட்டது. இதே பூஜைகள் அக்டோபர் 22 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத், மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?