” விஜய் முதலமைச்சராக இருப்பதை கண்டு பெருமை”... அஜித்  லண்டனில் ஓபன் டாக்!  

 

லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், தனது பந்தயத்தை நேரில் காண வந்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.அஜித்தின் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்துக்கு விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விஜய் பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதனிடையே, அஜித் - விஜய் சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY

The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the… pic.twitter.com/pZiZOKy7yW

— Le Mans Cup (@LeMansCup) September 10, 2026

தனது பந்தய நிகழ்வில் விஜய் கலந்து கொண்டது குறித்து பேசிய அஜித், தனது பிஸியான பணிகளுக்கு இடையிலும் சில்வர்ஸ்டோன் வந்து தன்னை ஆதரித்ததற்காக நன்றி தெரிவித்தார்.திரையுலகில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து பயணித்த விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக இருப்பதை நினைத்து தான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அஜித் குறிப்பிட்டுள்ளார்.இருவரும் தமிழ் சினிமாவில் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள். ரசிகர்களால் பல ஆண்டுகளாக போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ் வீடியோ...அஜித்தை பார்த்ததும் ஓடி வந்த விஜய்... கட்டியணைத்த நெகிழ்ச்சி தருணம்!

விஜயின் வருகை குறித்து மட்டும் அல்லாமல், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் அஜித் பாராட்டியுள்ளார்.உலகத் தரத்திலான பந்தயங்களை நடத்துவதற்கான கட்டமைப்புகள் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பது அஜித்தின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது. குறிப்பாக, சில்வர்ஸ்டோன் போன்ற தரமான பந்தயத் தளம் சென்னையிலும் உருவாக வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு அரசு ஆதரவு கிடைப்பது இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்கள் @CMOTamilnadu தனது பரபரப்பான பணிச்சுமைக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி எங்களை அழைப்பை ஏற்று நாளை வருகிறார்.

கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் திரைத்துறையில் சக கலைஞர்களாக இருந்து வருகிறோம், என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

மோட்டார்…

— தமிழக வெற்றிக் கழகம் (@TVK_NewsTrichy) September 11, 2026

 சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் அஜித்தும் விஜயும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வைரலாகி வருகின்றன.குறிப்பாக, விஜய் அஜித்தை நோக்கி சென்று அவரை அன்புடன் கட்டியணைத்த காட்சி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இருவரும் ஒன்றாக நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்த காட்சிகளும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.பல ஆண்டுகளாக அஜித் - விஜய் ரசிகர்களிடையே நிலவி வந்த போட்டி மனநிலைக்கு மாறாக, இரு நட்சத்திரங்களும் பரஸ்பர மரியாதையுடன் சந்தித்துக் கொண்ட இந்த தருணம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup போட்டியில் அஜித், Ajith RedAnt by Virage அணிக்காக பங்கேற்றார்.பந்தயத்தின் ஒரு கட்டத்தில் அவரது அணி முன்னணி இடங்களுக்கு முன்னேறிய நிலையில், பின்னர் ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக பின்னடைவை சந்தித்தது. இறுதியில் அணி ஒட்டுமொத்தமாக 38-வது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் LMP3 Pro/Am பிரிவில் 3-வது இடத்தைப் பெற்றது.அஜித்தின் கார் பந்தய பயணத்திற்கு விஜய் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததும், அதற்கு அஜித் நன்றி தெரிவித்ததும் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.