மாஸ் வீடியோ...அஜித்தை பார்த்ததும் ஓடி வந்த விஜய்... கட்டியணைத்த நெகிழ்ச்சி தருணம்!

 
அஜீத் விஜய்

 

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். இந்தப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தச் சந்திப்பின்போதுதான் இருவருக்கும் இடையே இந்த நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது. சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் அஜித்தை பார்த்த விஜய் அவரை நோக்கி சென்று அன்புடன் கட்டியணைத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் வெவ்வேறு துருவங்களாக பார்க்கப்பட்ட அஜித் - விஜய், ஒரே இடத்தில் சந்தித்து நட்புடன் பழகிய இந்தக் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இருவரும் ஒன்றாக நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்த காட்சிகளும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சந்திப்பை பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பல்வேறு சமூக வலைதள பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஜித் குமார், தனது Ajith RedAnt by Virage அணிக்காக Michelin Le Mans Cup போட்டியில் பங்கேற்றார். சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற பந்தயத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.அஜித்தின் பந்தயத்தை நேரில் பார்ப்பதற்காக விஜய் வருகை தந்தது ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இருவரும் சந்தித்துக் கொண்ட இந்த அரிய தருணம் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, விஜய் அஜித்தை நோக்கி சென்று கட்டியணைக்கும் வீடியோ ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இருவரது ரசிகர்களிடையே நிலவி வந்த போட்டி மனநிலைக்கு மாறாக, இரு நட்சத்திரங்களும் பரஸ்பர அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய இந்தக் காட்சி ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

 A heartwarming moment at Silverstone! ❤️🏁, Hon’ble Chief Minister of Tamil Nadu Thalapathy Vijay runs to Ajith Kumar and shares a warm hug ahead of the big race. Two icons, one beautiful moment! ✨, ...

இதனிடையே, சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup பந்தயத்தில் அஜித்தின் அணி ஒட்டுமொத்தமாக 38-வது இடத்தை பிடித்தது. இருப்பினும் LMP3 Pro/Am பிரிவில் அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், அஜித்தின் பந்தயப் பங்கேற்பு ஒருபுறம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அதே களத்தில் விஜய் அவரை சந்தித்து கட்டியணைத்த காட்சி தற்போது தனி வைரல் நிகழ்வாக மாறியுள்ளது.