undefined

 அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ கைது! 

 

 
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகந்தன், ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ என்ற பெயரில் அறியப்படும் இவர், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் தகவலின்படி, கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்ரீகந்தனின் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது சகோதரியின் சிறுமி மகளை அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. அந்த சிறுமி மீது ஸ்ரீகந்தனுக்கு தவறான ஆசை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 முதல் 2023 வரை பலமுறை சிறுமியை கானத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சிறுமி சமீபத்தில் தனது தாயிடம் வெளிப்படுத்தியதையடுத்து, தாயார் தியாகராய்நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையின் பின்னர், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீகந்தனையும், சிறுமியை அழைத்துச் சென்ற அவரது அத்தையையும் கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?