அமேசான் மேனேஜர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!! பரபரக்கும் தலைநகர்!!

 

டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வருபவர்   ஹர்ப்ரீத் கில். இவருக்கு வயது 36. இவர் தனது நண்பர் கோவிந்த் சிங்குடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். வடகிழக்கு டெல்லியின் பஜன்புராவின் சுபாஷ் விஹார் பகுதியில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட வழிமறித்து அவரை துப்பாக்கியால் சுட்டனர்.  

இந்த துப்பாக்கி சூட்டில்  ஹர்ப்ரீத் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால்   அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


 இச்சம்பவம்குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அத்துடன்  அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அமேசான் நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் முழுவதும்   பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை