இன்று பனையூரில் முக்கிய கூட்டம்... விஜய் பாதுகாப்புக்காக தவெக தொண்டர் அணி ஆலோசனை!
இன்று நவம்பர் 2ம் தேதி காலை தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர் அணியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது.
விஜயின் பிரசார நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என தலா 2 பேர் வீதம் மொத்தம் 468 பேர் தொண்டர் அணியாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இவர்கள் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பயணங்களில் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவுள்ளனர். இதற்கான வழிகாட்டல், நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகள் குறித்த ஆலோசனைகள் இன்றைய கூட்டத்தில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கரூரில் நடந்த தவெக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பின்னணியில், இத்தகைய விபத்துகள் இனி நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் தொகுதி அடிப்படையிலான தொண்டர் அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயின் வரவிருக்கும் பிரசாரப் பயணங்களுக்கு முன் இந்த அணியின் பணியாற்றும் முறைகள் நாளைய ஆலோசனையில் தீர்மானிக்கப்படவுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!