திமுக ஆட்சியால் பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் - அண்ணாமலை ஆவேசம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இளம்பெண்ணை காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசால் பெண்கள் தைரியமாக வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இது குறித்த அவரது பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
திமுக அரசின் மீதும், சட்டத்தின் மீதும், குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!