கரூரில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கரூரில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். நேறிரவு நிலவரப்படி 40 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன் தினம் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் சுகுணாவை தேடியுள்ளனர். அப்போது அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!