undefined

வீரத் தீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கத்துக்கான விண்ணப்பங்கள் !

 
 

தமிழக அரசு, வீரத் தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது.

பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இந்த விருது வழங்கப்படும். வயது வரம்பு ஏதுமில்லை. விருதுடன் ரூ.1,00,000/- (ஒரு இலட்சம் ரூபாய்) காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வரும் 26 ஜனவரி 2026 அன்று குடியரசு தின விழாவில் வழங்கப்படும்.

வீரத் தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் பெறப்படும். விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களும் தெளிவாக நிரப்பப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படும் நபரின் வீரத் தீரச் செயல்களை விளக்கும் தகுதியுரை அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15 டிசம்பர் 2025 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்களே பரிசீலிக்கப்படும்; காலாவதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியானவர்களை அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு தேர்வு செய்யும் என பொதுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!