ஏ.ஆர். ரகுமான் மகள் ஆவேசம்.... என் அப்பாவை குறித்து யோசித்து பேசுங்கள்!!

 

சென்னை பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரகுமான் “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மழை, கூட்ட மற்றும் போக்குவரத்து நெரிசல் பலருக்கு இடமின்மை என பல பிரச்சனைகள் இதனால் ரசிகர்கள் வெறியாகி இருக்கின்றனர். சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி எப்போ என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் பலரும் தயவு செய்து இனிமே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தீடாதீங்கப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி. சென்னை பனையூரில் உள்ள ஆதித்ய ராம் மைதானத்தில் நடைபெற்றது. 25000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில்  பெரும் பேசுபொருளாகியுள்ளது. ரசிகர்கள் பலர் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனங்களுக்கு அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2016-ம் ஆண்டு சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார்.2018-ம் ஆண்டு கேரளாவில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி அந்த பணத்தை அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல், 20220-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அடிப்படை வசதிகள் தேவைப்படும் பல குடும்பங்களுக்கு அவர் உதவி செய்தார்.

மேலும் 2022-ம் ஆண்டு லைட்மேன் குழுவினர்களுக்காக ஒரு இலவச இசை நிகழ்ச்சியை நடத்தி அவர்களது குடும்பங்களுக்கு உதவினார். இதையெல்லாம் மறந்து விட்டு அவர் மீது ஒரு சில மீடியாக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது, இது மிகவும் மலிவான அரசியல் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதனை நேரில் கண்டு ரசிக்க   காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரால் நிம்மதியாக உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை.  டிக்கெட்டின் விலை ரூ5000, ரூ6000 என வசூலிக்கப்பட்டும் மைதானத்தில் நுழைய முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம்.  இதனால்  கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இந்நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காசு கொடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர்.   நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்ததே இந்த குளறுபடிக்கு காரணம் என்கின்றனர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்.  

இது குறித்து நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ” சென்னைக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் நன்றி. ஏகோபித்த வரவேற்பு மற்றும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சக்சஸ் ஆகி உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை