undefined

அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண வீடியோ வைரல்!!

 

நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும்,  செப்டம்பர் 13ம் தேதி  பாரம்பரிய முறைப்படி திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.  இந்நிலையில், புதுமணத் தம்பதிகள்  கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில்  கலந்து கொண்ட  பேசிய கீர்த்தி பாண்டியன், திருமணத்தின் போது,  3  முடிச்சுகளும் நீயே போட வேண்டும் என அசோக் செல்வனுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.  இந்நிலையில்   திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை அசோக் மற்றும் கீர்த்தி பாண்டியடன் தம்பதி தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.  
 

தமிழ் திரையுலகில் இணைந்த கைகள் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அருண் பாண்டியன்.  இவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி இந்து கலாச்சார படி திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமண விருந்தில் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டது பெரும் பேசு பொருளானது.

<a href=https://youtube.com/embed/cqF5gsNvRlk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/cqF5gsNvRlk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title=""எங்களின் திருமண விழா" - cute ஆக வந்த கீர்த்தி பாண்டியன்.. அசோக் செல்வன் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!" width="932">

இந்நிலையில்   சென்னையில் இவர்களது வரவேற்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர்கள் ஆர்யா முதல் சூர்யா வரைபல பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சூது கவ்வும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி   தெகிடி, பீட்சா 2 போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகர்   அசோக் செல்வன்.  சமீபத்தில் இவர் கதாநாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற  போர் தொழில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அப்படம் வெற்றியடைந்த கையோடு தன்னுடைய திருமணத்தையும் நடத்தி கொண்டுள்ளார் நடிகர்  அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து கரம்பிடித்துள்ளார்.    நடிகர்கள் சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என  நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றாக வந்து அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!