undefined

உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்ற அசாமின் மொய்தாம் கல்லறைகள்.. கௌரவித்த யுனெஸ்கோ!

 

அசாமில், 600 ஆண்டுகளுக்கு முன், அகோம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மொய்தாம் எனப்படும் கல்லறைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் முக்கிய கூட்டம் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் ஆராயப்படுகின்றன.

இந்நிலையில், அசாமில் உள்ள மொய்தாம் என்ற கல்லறை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாம் 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோம் வம்சத்தால் ஆளப்பட்டது. பின்னர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தபோது, ​​அவர்களை அடக்கம் செய்ய புதைகுழிகளைக் கட்டினார்கள்; அதற்கு மொய்தாம் என்று பெயர்.

இந்த மொய்தாங்கள் சரைடு மாவட்டத்தில் உள்ளன. இது இந்தியாவின் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதைகுழிகளுக்குள் உடல் வைக்கப்பட்டுள்ள அறை உள்ளது, அதைச் சுற்றி ஒரு அரைக்கோள மண் மேடு உள்ளது, அதன் மேல் ஒரு சிறிய செங்கல் குவிமாடம் அமைக்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு செய்யப்படுகிறது. அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் மனாஸ் தேசிய பூங்கா ஆகியவை ஏற்கனவே யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!