ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு!
சென்னை மதுரவாயல் புறவழிச் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி, அதனை ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிடும் சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், சர்வீஸ் சாலையில் ஒரு ஆட்டோ டிரைவர் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
அந்த ஆட்டோ டிரைவர், இடது புற சக்கரத்தை மேலே தூக்கி, ஆட்டோவை சாய்த்தபடி ஓட்டிய காட்சியை இன்னொரு ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் இணைய பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை அடையாளம் கண்டு விசாரணை தொடங்கியுள்ளனர். விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக, அவர்மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!