undefined

சிலிர்க்கும் பரவசம்... ஏஐ தொழில்நுப்டத்தில் கண்களை சிமிட்டும் அயோத்தி ராமர்.. வைரல் வீடியோ...!

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  ராமர் கோவில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 7000க்கும்மேற்பட்ட விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். கருவறையில் உள்ள 5 வயது பால ராமரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது குறித்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  இந்நிலையில் தான் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அயோத்தி பால ராமர்  கண்சிமிட்டும் சிலை குறித்த   வீடியோ வெளியாகி பார்க்கும் அனைவரையும் புல்லரிக்க வைக்கிறது.   பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்து  சிலையின் கண்களை திறந்தார்.

இந்த ராமர் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார்.   சிலையின் மொத்த உயரம் என்பது 51 இன்ச் ஆகும். 200 கிலோ எடை கொண்டது.  அதில் விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம் பெற்றுள்ளது.  மேலும் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிலையின் கீழ் பகுதியில் நவக்கிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி  சிற்பங்கள் உள்ளன.   ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி ராமர் சிலையின் நெற்றியின் விழும்படி கருவறை வடிவமைக்கப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது.
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க