பகீர்... லிப்ட் மோதி பொறியாளர் தலை நசுங்கி பலி... பிரபல வணிக வளாகத்தில் பரபரப்பு!  

 

சென்னையில் ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் பொறியாளர் ராஜேஷ்  புரொஜெக்டரை சுத்தம் செய்யும் கொண்டிருந்தார். அப்போது திடீரென லிப்ட் தானாக இயங்கத் தொடங்கியதில் அவர் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

4வது ஸ்கிரீனில் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதால் ராஜேஷ் மற்றும் மூத்த பொறியாளர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன், டேவிட் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜேஷ் 25 மீட்டர் உயரத்தில் நின்று புரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதற்காக பழுதான லிப்ட்டை கீழே இறக்கி வைத்திருந்தனர். அப்போது, திடீரென லிப்ட் தானாக இயங்கி மேல் நோக்கி  சென்றது. லிப்ட் பாதையின் இடையே நின்று இருந்த பொறியாளர் ராஜேஷின் தலை கட்டிடத்தின் மேல் தளத்தில் பலமாக மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.  சக ஊழியர்கள் ராஜேஷை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  பொறியாளர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேஷ் மனைவி தேவிகா அளித்த புகாரின் பேரில்   போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மூத்த பொறியாளர் தனசேகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜேஷ் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு திருவிக நகர் 74வது வட்ட பொறுப்பாளர்  என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?