undefined

 இஸ்ரோவின் சாதனை... பாகுபலி ராக்கெட் வெற்றி... பிரதமர் மோடி பெருமிதம்!  

 
 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்5 (LVM3-M5) ராக்கெட், CMS-03 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு வெற்றிகரமாக புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே ராக்கெட் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. 43.5 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் 18,000 கிலோ எடை வரை ஏந்திச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது.

இந்த வெற்றியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03-ஐ வெற்றிகரமாக ஏவியதற்காக இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளித் துறை தொடர்ந்து புதுமையும் முன்னேற்றமும் காட்டி நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!