undefined

நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி மனு....!!

 

லியோ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூல்சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில் லியோ படம் குறித்து  நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தில்  த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை  எனக்கூறினார்.  இவரின் இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

த்ரிஷாவுக்கு ஆதரவாக  லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட  பல திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில்  அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த  விவகாரத்தில் விசாரணைக்கு நடிகர் மன்சூர் அலிகான் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார். இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள  நிலையில், முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!