இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க... ஏப்ரல் 18 வரை வங்கிகளுக்குத் தொடர் விடுமுறை!
தமிழகப் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் பல்வேறு மாநிலங்களின் பிராந்தியப் பண்டிகைகள் காரணமாக ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 18 வரை நாட்டின் பல பகுதிகளில் வங்கிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14 அன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை நாட்களின் பட்டியல் மாறுபடுகிறது. இதனால் வங்கிப் பணிகளுக்காகக் கிளைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏப்ரல் 15 அன்று பெங்காலி புத்தாண்டு மற்றும் இமாச்சல தினத்தை முன்னிட்டு சில மாநிலங்களில் விடுமுறை தொடர்கிறது. அதே நேரத்தில் ஏப்ரல் 18 ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் விடுமுறை காரணமாகக் காசோலை பரிமாற்றம் மற்றும் வங்கி சார்ந்த நேரடி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களை அதிகம் நாட வாய்ப்புள்ளது.
பணப் பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இணையவழி வங்கிச் சேவை மற்றும் கைபேசி செயலிகளைப் பயன்படுத்துமாறு வங்கி நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் விடுமுறை நாட்களிலும் தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குப் பணத்தைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் டிஜிட்டல் முறையைப் பின்பற்றி அலைச்சலைத் தவிர்க்கவும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!