அத்வானிக்கு பாரத ரத்னா விருது.. மோடி பெருமிதம்... !

 

 இந்தியாவின்  மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது , பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது .  கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர். இவர்   ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கியவர்.  அத்வானியின்  ரத யாத்திரை முடிவில்  அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தவர். 2009 ல் நாடாளுமன்றத் தேர்தலில்  பாஜகவின் பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டவர்.  2015ல்  எல்.கே. அத்வானிக்கு  பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா   அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பிரதமர் வெளியிட்ட பதிவில்  "எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரிடம் இது குறித்து    வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அத்வானி, இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மிகவும் மகத்தானது. நாட்டின் துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்தவர் அத்வானி.  நமது நாட்டின் உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை உயர்த்திக் கொண்டவர்.  நாடாளுமன்ற செயல்பாடுகள் எப்பொழுதும் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கக் கூடியவை எனக் குறிப்பிட்டுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க