undefined

உஷார்... வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகள் திருட்டு!

 

தூத்துக்குடியில் அரசு பேருந்து டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம்  மதிப்புள்ள நகைகளை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தங்க பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் 57. இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூமாரி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சக்தி மாலா கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் பின்னர் 17ஆம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு 20 லட்ச ரூபாய் ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் 

விசாரணையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கார்த்திகைபுரம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன் (38), தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்ப நாதன் (21) ஆகிய 2பேரும் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து 20 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?