undefined

உஷார்... ஓடும் ரயிலில் நகை திருட்டு... தம்பதி கைது!

 

 

போத்தனூர் அருகே ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் இருந்து 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், தம்பதியர் இருவரும், 12 வயது சிறுவனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெல்லை மாவட்ட மருதகுளத்தைச் சேர்ந்த இசக்கி (57) தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரெயிலில் கோவைக்கு பயணம் செய்தார். அந்த ரெயில் போத்தனூர் அருகே சென்றபோது, இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்திருந்த பேக்கை ஒரு சிறுவன் மெல்ல இழுத்து திருட முயன்றான். இதைக் கவனித்த இசக்கி, சக பயணிகளின் உதவியுடன் சிறுவனை பிடித்தார்.

அப்போது, அந்த சிறுவனுக்கு ஆதரவாக வந்த வாலிபர் ஒருவர் இசக்கியுடன் தகராறில் ஈடுபட்டு தடுத்தார். நிலைமை மோசமடைந்ததினால், இசக்கி அவசர சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் ரெயில் 17 நிமிடங்கள் தாமதமானது.

இந்நிலையில் வாலிபரும் சிறுவனும் இசக்கியைத் தாக்கிவிட்டு ரயிலில் இருந்து இறங்கி தப்பினர். பின்னர் உடைமைகளைச் சரிபார்த்த போது, பேக்கில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து இசக்கி போத்தனூர் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர்கள் போத்தனூர் செட்டிப்பாளையம் பாரதிநகரை சேர்ந்த உஜாத்அலி (31), அவரது மனைவி சத்யா (25), அவர்களது உறவினரான 12 வயது சிறுவன் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!