உஷார்... தமிழகத்தில் வேகமெடுக்கும் எலி காய்ச்சல்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?!
உஷாராக இருங்க மக்களே... தமிழகத்தில் மழைக் காலத்தில் எலி காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்று தெரிஞ்சுக்கோங்க. சுத்தம் மட்டுமே சுகாதாரம் காக்கும். நம் வீட்டை மட்டுமல்லாமல், வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருங்க. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல இடங்களில் மழை நீர் தேங்கி, எலி காய்ச்சல் (Leptospirosis) நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணம் விலங்குகளின் சிறுநீர் மற்றும் எலிகளின் கழிவு. குறிப்பாக மழைக்காலத்தில் இந்த தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘லெப்டோ ஸ்பைரோ சிஸ்’ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கி, சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உட்பட 10 ஆய்வகங்களில் நோயின் பரவலை கண்காணித்து வருகிறது.
கடந்த 2021ல் 1,046 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டிருந்ததைப் போல், 2022ல் 2,612 பேருக்கும் 2023ல் 3,002 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், தேங்கியிருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. வெளியே சென்ற பின் கை, கால்களை நன்னீரில் சோப்பால் நன்கு கழுவி அலச வேண்டும்; முடியுமானால் குளிப்பது சிறந்தது. இதன் மூலம் நோயின் பரவலை தடுக்க முடியும் என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!