உஷார்... குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்ட பாத்திரம்... தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை!
சென்னையில் இரண்டரை வயது குழந்தையின் தலையில் சிக்கியிருந்த அலுமினிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக அகற்றி உயிர் அச்சமின்றி பாதுகாத்துள்ளனர்.
பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் லட்சுமி – ரமேஷ் தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை விளையாட்டு காரணமாக அலுமினிய பாத்திரத்தை தலையில் அணிந்தது. பின்னர் அது சிக்கிக்கொண்ட நிலையில் குடும்பத்தினர் பலமுறை முயன்றும் அந்த பாத்திரத்தை அகற்ற முடியாமல் பதற்றமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் செம்பியம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் பெற்ற தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாத்திரத்தை குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படாதபடி கத்திரிக்கோலின் உதவியுடன் கவனமாக வெட்டி அகற்றினர்.
இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் நிம்மதியடைந்தனர். தீயணைப்பு வீரர்களின் துரிதச் செயல்பாடு அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!