உஷார்... இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களின் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காலை மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அதே பகுதிகளில் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 160 கிமீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 250 கிமீ தொலைவிலும், பாராதீப்பிலிருந்து தெற்கு-தென்மேற்கே 280 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், கோபல்பூா் மற்றும் பாராதீப்புக்கு இடையே கரையை கடக்கும். இதனால் வரும் அக்டோபர் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று அக்டோபர் 4ம் தேதி சனிக்கிழமை, திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் இந்த 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!