பவதாரணியின் கடைசி புகைப்படம்.... தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு.... !

 

தமிழ் திரையுலகின் பாடகியும், இசையமைப்பாளருமான  பவதாரிணி  கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். புற்றுநோய் காரணமாக இலங்கையில்  சிகிச்சை  பலனின்றி  காலமானார். அவரது திடீர் மறைவு   திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கையில் இருந்து பவதாரணி   உடல் மறுநாள் சென்னையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.  பண்ணைபுரத்தில்  இளையராஜாவின் சொந்த வீட்டில் பவதாரிணி உடல் அவரது தாய் ஜீவா உடல் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.


அவரது இறுதிச்சடங்கில்   வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா என பவதாரிணியின் சகோதரர்கள் அனைவரும் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் பாடி வழியனுப்பி வைத்தது பார்ப்பவர்களை காண்பவர்கள் கண்களை கலங்கடிக்கச் செய்துள்ளது.  இந்நிலையில்  தான் இயக்குநர் வெங்கட்பிரபு பவதாரிணியுடனான கடைசி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.  வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன், வாசுகி பாஸ்கர் என தனது குடும்பத்தினர் அனைவரையும் பவதாரிணி சந்தித்து பேசினார்.  இந்தப் புகைப்படத்தைப்  பதிவிட்டு   ‘பவதாரணியுடன்  அனைவரும் இணைந்திருந்த படம் இது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்’  .


இந்தப் பதிவில்  ‘தங்க ரதத்தில் ஒரு வெள்ளி நிலவு’ பாடலையும்  பகிர்ந்துள்ளார் வெங்கட்பிரபு. பவதாரணிக்கு தன்னுடைய இறப்பை முன்பே தெரிந்து வைத்திருந்தார்.   தன்னுடைய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டதாக தெரிகிறது.   அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க