undefined

பைக் ரேஸ் கலகம்...  6 பேர் கைது... 6 விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல்!

 

நெல்லை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பைக் ரேஸ் கலகம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. எந்தவித வேகக் கட்டுப்பாடுகளும் இல்லாத சுமார் 10 கி.மீ. நீள சாலையில் இளைஞர்கள் சூதாட்டம் போல் பணம் வைத்து பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் வாரிசுகளும் இதில் பங்கேற்கின்றனர். ஹாரனை அலறவிட்டு, மின்னல் வேகத்தில் பறந்து செல்வதோடு, சென்டர் ஸ்டாண்டை சாலையில் உரசவிட்டு தீப்பொறிகள் பறக்க விடுவது போன்ற ஆபத்தான செயல்களும் நிகழ்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் உயிர் அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தங்களது திறமையை காட்டவும், காதலியை கவரவும், பணம் சம்பாதிக்கவும் சில இளைஞர்கள் உயிரை பொருட்படுத்தாமல் பைக்கில் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு, பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் பழவூரில் கார் விபத்தில் தாத்தா–பேத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வள்ளியூர் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.

அந்த வேளையில், வள்ளியூர் புறவழிச்சாலையில் பைக் ரேஸ் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததும், போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, விலை உயர்ந்த 6 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர்களது பெற்றோரை அழைத்து எச்சரித்த போலீசார், இனி இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினர். சமூக ஆர்வலர்கள், இத்தகைய பைக் ரேஸ் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் சட்ட நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!