undefined

லவ் யூ புருஷா... நயனுக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த விக்கி... வைரலாகும் இன்ஸ்டா... !!

 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.


சுமார் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில், பின்னர் இவர்கள் தங்கள் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு வழங்கியதால், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மாற்றப்பட்டது.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நயன்தாரா,  தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கடந்த 18ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு பிறந்த நாள் பரிசாக மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதன் விலை ரூ. 2.60 கோடியிலிருந்து ரூ. 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் தொடர்பான புகைப்படத்தை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!