100 நாள் வேலைத் திட்டத்தில் கருங்குளவி கொட்டியதில் பெண் பலி, 10 பேர் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி கருங்குளவிகள் கொட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் பெண்கள் உட்பட ஏராளமானோா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திடீரென மரத்திலிருந்து பறந்து வந்த கருங்குளவிகள் பணியில் இருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தன. இதனால், அனைவரும் அலறித் துடித்து சிதறி ஓடிய நிலையில், அவா்களில் 11 போ் படுகாயம் அடைந்தனா். இதுகுறித்து அங்கிருந்த பணித்தள பொறுப்பாளா் பிரபாகா் அளித்த தகவலின்பேரில், ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காஞ்சனா, ஊராட்சிச் செயலா் வெங்கடேசன் பாதிக்கப்பட்டவா்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.
இதில், படுகாயமடைந்த சின்னகுழந்தை (75), ரேகா (37), சுபலட்சுமி (32), செல்வி (56), இந்திரணி (60), சுதா (67) ஆகியோா் தீவிர மற்றும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, சின்னகுழந்தை வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!