undefined

பாஜகவுடன் இணைந்தது  பாமக ... அடுத்து தேமுதிக? சூடுபிடிக்கும் அரசியல்  களம்!

 

இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை, அரசியல் நிலவரம், பிரச்சாரங்கள் என அனைத்து கட்சிகளும் மும்மூரமாக களப்பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் பட்டியல் என கட்சிகள் களப்பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கமலின் மக்கள் நீதி மய்யம்  திமுகவுடன் இணைந்துள்ளது.

பாமக  பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்கனவே  ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,  கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்காக ராமதாஸை சந்தித்து அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.  மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  


அதேசமயம் பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்குவதாக பாஜக உறுதி அளித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை  பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!