ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குண்டுவெடிப்பு... பாஸ்டனில் பரபரப்பு!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், அந்தக் கல்லூரியின் லாங்வுட் வளாகத்தில் உள்ள கோல்டன்சன் கட்டிடத்தின் 4வது மாடியில் திடீரென வெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பு சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பரபரப்புடன் ஓடிச்சென்றனர்.
வெடிப்பு ஏற்பட்ட உடனே ஹார்வர்ட் பல்கலைக்கழக காவல் துறை, பாஸ்டன் போலீஸ் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்த நேரத்தில் இருவர் கட்டிடத்திலிருந்து விரைந்து தப்பியதாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அந்த இருவரை அடையாளம் காணவும், சம்பவத்தின் பின்னணியை உறுதி செய்யவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு எங்கள் முதல் முன்னுரிமை” என்று கூறியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!