பெரும் பரபரப்பு... கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அணு உலை ஒன்று மற்றும் இரண்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் விரிவான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் உலை 2013ஆம் ஆண்டிலும், இரண்டாவது உலை 2016ஆம் ஆண்டிலும் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது மின்சாரம் உற்பத்தி செய்து வரும் இந்த இரண்டு உலைகளுக்கும் மின்னஞ்சல் வழியாக வந்த மிரட்டல், அப்பகுதியில் உள்ள பணியாளர்கள் மற்றும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!