பிரபல யூடியூபர் மணி வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
பிரபல யூடியூபர் மணி சமீப காலமாக தனது வீடியோக்களில் அரசியல் கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும் ஆவார். குறிப்பாக, தவெக தலைவர் விஜய் மற்றும் கரூர் சம்பவம் குறித்து அவருடைய கண்டன பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இதன் பிறகு, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில், இது வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டாலும், இது மணிக்கு கிடைக்கும் இரண்டாவது மிரட்டல் என்பதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
இதேவேளை தமிழகத்தில் விமான நிலையம், எடப்பாடி பழனிசாமியின் வீடு, அதிமுக அலுவலகம், விஜய் வீடு என முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை புரளிகளாகவே இருந்து வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!