நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.... பெரும் பரபரப்பு!
சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடும், அமெரிக்க துணை தூதரகமும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு புதன்கிழமை மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி, பிரபு வீடு மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். தகவல் அறிந்ததும், போலீஸார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். பின்னர், அந்த மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல், சமீபத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடும் மிரட்டல் மின்னஞ்சலுக்கு இலக்கானது. தொடர்ச்சியாக இத்தகைய மிரட்டல்கள் அதிகரித்துள்ள நிலையில், இதற்குப் பின்னால் உள்ள நபர்களை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!