undefined

சிறுவர் கதை புத்தகங்களுக்கு புக்கர் பரிசுடன் 50,000 பவுண்ட் தொகை பரிசு!

 

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வெளிவரும் சிறுவர் கதை புத்தகங்களுக்கு புக்‌கர் பரிசு அடுத்த ஆண்டில் முதல் முறையாக வழங்கப்படும் என்று புக்‌கர் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த புதிய விருது 8 முதல் 12 வயது சிறுவர்களுக்கான சிறந்த புனைகதை புத்தகத்திற்கு வழங்கப்படும். வெற்றி பெற்ற நூலுக்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்கப்பட உள்ளது. தேர்வு செய்கையில் சிறுவர்கள் குழு மற்றும் நடுவர் குழுவினரால் பரிசுக்குரிய புத்தகம் தீர்மானிக்கப்படும்.

புக்‌கர் பரிசு இந்த சிறுவர் கதை பிரிவில் 2027 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் புத்தகம் ஆங்கிலத்தில் அயர்லாந்து அல்லது இங்கிலாந்தில் வெளிவரும் வகையில் இருக்க வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் வாசிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், புதுமையான சிறுவர் கதை எழுத்தாளர்களுக்கும் வாய்ப்புகள் உருவாகும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?