விசாரணைக் காவலில் சிறுவன் பலி... தொடரும் சோகம்!
மதுரை மாநகர் கோச்சடை பகுதியில் வசித்து வருபவர் ஜெயா. இவரது மூத்த மகன் முத்து கார்த்திக். இந்தச் சிறுவனை 2019ம் ஆண்டு குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இந்த விசாரணையின் போது முத்துகார்த்திக்கை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகன் இறப்புக்கு காரணமான மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜெயா வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்து கார்த்திக் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் மதுரை எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!