பள்ளி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்து காதலன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை..!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியில் வசித்து வருபவர் 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி தீப்தி. அதே கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது அசோக். இருவரும் காதலித்து வந்த நிலையில் தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தீப்தி காக்கிநாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த அசோக்கும் அங்கு சென்று தீப்தியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். உடனே தீப்தி அந்த பகுதியில் உள்ள காட்டேறு கால்வாய்க்கரைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், காதலன் அசோக், திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் தீப்தியின் கழுத்தை அறுத்துள்ளார்.இதனால் நிலைகுலைந்த தீப்தி, ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து, சிறிதுநேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து கிளம்பி சென்ற அசோக், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காதலியை கொலை செய்து இளைஞர் தற்கொலை செய்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காக்கிநாடா பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!