மாப்பிள்ளை அழைப்பில் காரின் மேல் ஏறி நின்று மணமகன் ஊர்வலம்... வைரல் போட்டோஷூட்!
உத்தரபிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின் போது மாப்பிள்ளை ஒருவர் காரின் மேல் சிலை இருப்பது போன்ற தோரணையுடன் காட்சியளிக்கும் வைரலான புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் டில்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்து, ஸ்டண்டில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் SUV காரில் மணமகன் உடையில் இருந்த நபர் அங்கித் என அடையாளம் காணப்பட்டார். மணமகன் சஹாரன்பூரில் உள்ள பைலா கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக மீரட்டில் உள்ள குஷாவலி கிராமத்தில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்து அதிகாரியான யதேந்திர சிங், சம்பவத்தை அறிந்ததும் விசாரணையைத் தொடங்குவதை உறுதிப்படுத்தினார், மன்சூர்பூர் போலீஸார் அங்கித்தை நிறுத்தி வாகனத்தைக் கைப்பற்றினர். விசாரணை தொடர்ந்த நிலையில், மணமகன் மற்றொரு வாகனத்தில் திருமண இடத்திற்கு செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!