பிணத்தில் புழுக்கள் மொய்த்ததால் தீ வைத்த அண்ணன்...  முன்னாள் விஞ்ஞானி மகள் மர்ம மரணம்!

 

தன்பாத் முன்னாள் விஞ்ஞானியின் மகள் லிபிகா குமாரி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் அக்கம் பக்கத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் உள்ளே பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில் லிபிகாவின் அண்ணன் பிரணவ் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. தங்கை இறந்த பிறகு அவரது உடலில் புழுக்கள் உருவானதால், அந்தப் புழுக்களைக் கொல்வதற்காகவே உடலுக்குத் தீ வைத்ததாக அவர் விசித்திரமான விளக்கத்தை அளித்துள்ளார். அதே நேரத்தில், மற்றொரு சகோதரரான பிரத்யுத் தனக்குத் தங்கையின் மரணம் குறித்தே தெரியாது என முரண்பட்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

தந்தை மறைவுக்குப் பிறகு லிபிகா மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் ஜார்க்கண்ட் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சகோதரர்களின் மாறுபட்ட வாக்குமூலங்களால் சிக்கல் நீடிக்கும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை