தண்ணீர் டேங்க்குக்குள் தலையை மாட்டிக் கொண்ட காளை... சந்தையை அலற விட்ட விபரீதம்... வைரல் வீடியோ!
சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ விசித்திரமான வீடியோக்கள் வந்தாலும், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை ஒரு பக்கம் சிரிக்கவும், மறுபக்கம் பதறவும் வைத்துள்ளது. சந்தைப்பகுதி ஒன்றில் உலவிக்கொண்டிருந்த காளை ஒன்றின் தலையில், எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி ஒன்று மாட்டிக்கொண்டது. கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் எதைக் கடித்தது என்று தெரியாமல் மிரண்ட அந்த காளை, சந்தையையே ஒரு நிமிடம் போர்க்களமாக மாற்றிவிட்டது.
நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட அங்கிருந்த சில துணிச்சலான இளைஞர்கள், உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கினர். ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்த காளையை ஒரு வழியாகச் சூழ்ந்து பிடித்து, லாவகமாகச் செயல்பட்டு அதன் தலையில் இருந்த தண்ணீர் தொட்டியை அப்புறப்படுத்தினர். தொட்டி கழன்றதும் சாந்தமான காளையைப் பார்த்த பின்னரே மக்களுக்கு மூச்சு வந்தது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "என்ன நந்தி மகாராஜ்... இப்படி சிக்கிக்கிட்டீங்களே?" என கிண்டல் செய்தாலும், காளையை மீட்ட இளைஞர்களின் வீரத்தையும், மனிதநேயத்தையும் மனதார பாராட்டி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!