undefined

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பட்டாசு வெடிக்கத் தடை...  கோவில் நிர்வாகம் !  

 
 

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் மரமத்து மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நடைபெறும் கோபுரங்களில் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், தீ விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோவில் நிர்வாகம் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி கோவில் வளாகம், சித்திரை வீதிகள் மற்றும் ஆவணி மூல வீதிகளில் பக்தர்களும் வியாபாரிகளும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. கோபுரப் பணிகள் நடைபெற்று வருவதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?