undefined

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்... மழை நேரத்தில் சென்னையில் பரபரப்பு!

 

சென்னை பெசன்ட் நகரில் நேற்றிரவு ஒரு கார் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெசன்ட் நகர் கடற்கரை அருகே சாலையில் சென்ற கார் ஒன்றில் திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து புகை எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே காரை ஓரமாக நிறுத்தி, காரில் இருந்தவர்களுடன் வெளியே இறங்கினார். சில நொடிகளில் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.

உடனே அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், கார் முழுவதும் கருகி நாசமானது.

அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தின் காரணம் குறித்து பெசன்ட் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் அந்தப் பகுதியில் ஒரு கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பானது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?